மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

0
102

கல்னேவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (15) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் நெகம்பஹா பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

வயலுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் நெகம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கல்னேவ காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.