வவுனியாவில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதியதில் 32 வயது இளைஞன் உயிரிழப்பு.. வீடியோ.!

0
55

வவுனியா – ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாமையுடன் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடப்பெற்றுள்ளது.

வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதுண்டு வீதியின் அருகே நின்ற நபருடனும் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளமையுடன் குறித்த விசேட அதிரடிப்படையின் வாகனம் விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து தப்பி சென்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி மற்றும் வீதியின் அருகே நின்றவர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிலின் சாரதி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.

இவ் விபத்தில் 32வயதுடைய கண்ணதாசன் திவியன் என்ற நபரே உயிரிழந்தவராவார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (Video,Photo-FB)