யாழில் 15 வயது சிறுமி கர்ப்பம்.. 35 வயது இளைஞன் கைது.!

0
65

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளார், இச்சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…

குறித்த சிறுமி 5 மாதங்கள் கர்ப்பமான நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்திய போது இவர் கர்ப்பம் அடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை பல தடவைகள் துஷ்பிரயோகம் செய்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலைகளில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்.!

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்பு.!

இலங்கையில் சோகத்தை ஏற்படுத்திய காதல் ஜோடியின் உயிரிழப்பு..!