அவுஸ்திரேலியாவில் நடந்த கோர விபத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு.!

0
21

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 28 வயதான தாரக விஜேதுங்க என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள Bass நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டவர் என தெரியவந்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் சாரதி போதைப்பொருள் மற்றும் மது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் 4வது வேட்பாளராக தாரக விஜேதுங்க போட்டியிட்டு 21,200 வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.