பதுலு ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்ப்பு.!

0
45

பதுலு ஓயாவில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (11) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது.

பதுளை-ஹங்வெல்ல பாலத்திற்குக் கீழே உள்ள பகுதியில் ஆற்றின் ஓரத்தில் உள்ள ஒரு பாறையில் சடலம் சிக்கியிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து பதுளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் வருகைதந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த நபரொருவர், உயிரிந்த பெண் தனது தாயார் என்று அடையாளம் காட்டியுள்ளார்.

தனது தாயார் மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளதாகவும், அது குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையம் சென்றதாகவும், பதுளு ஓயாவில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததை அடுத்து தான் இந்த இடத்திற்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர் பதுளை, சிறிமல்கொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஆவார்.

இந்த சம்பவம் குறித்து பதுளை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பதுளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.