மட்டக்களப்பில் பழங்களுடன் பயணித்த டிப்பர் வாகனம் விபத்து..!

0
175

இன்று அதிகாலை சம்மாந்துறை நோக்கி பழங்களை ஏற்றி வந்த டிப்பர் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் விபத்துக்குள்ளாக்கியது

எம்பிலிப்பிட்டியவில் இருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி வழியே பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமே இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணிக்கும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்ப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதே வேளை வாகனம் பாரியளவான சேதத்தை எதிர்கொண்டுள்ளது.(video,photos-fb)