வெலிமடை, டயரபா பகுதியில் இன்று (10) இரவு தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த பேருந்தில் இருந்த சுமார் 20 பயணிகளை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
பண்டாரவளையில் இருந்து வெலிமடை நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த சுமார் 20 பேர் மிரஹாவத்த பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை, வெலிமடை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண் ஒருவர் உயிரிழந்ததாக வெலிமடை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.(photos-fb)