முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கஞ்சாவினை வவுனானியாவினை சேர்ந்த இருவர் வாங்கிக்கொண்டு செல்லும் போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வைத்து வவுனியாவினை சேர்ந்த இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் 09.05.25 நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து இரு நபர்கள் கஞ்சாவினை கொள்வனவு செய்வதற்காக புதுக்குடியிருப்பு நோக்கி வந்துள்ளார்கள்.
இவர்களுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வியாபாரிகள் டீல் பேசியுள்ளார்கள்.
இவர்கள் இரண்டு கிலோ வரையான கஞ்சாவினை எடுத்துக்கொண்டு மீண்டும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கற்சிலை மடுப்பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா மற்றம் சந்தேக நபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் (10) ஒட்டுசுட்டான் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.