தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்..!

0
24

அம்பாறை பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (06) அதிகாலை 5:15 மணியளவில், பதியதலாவ பொலிஸ் நிலையத்தின் காவலர் குடியிருப்பில் டி-56 ரக துப்பாக்கியால் சுட்டு இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இவ்வாறு உயிரிழந்தவர், 59 வயதுடைய, பிபிலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பதியதலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.