தகாத உறவால் நேர்ந்த சம்பவம்.. 46 வயது பெண் ப.டு.கொ.லை – சந்தேக நபர் கைது.!

0
50

மொனராகலை – கதிர்காமம், பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை (01) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கதிர்காமம், மயிலகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம், பெரகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

கொலை செய்யப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் சுமார் 15 வருடங்களாக தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் கடந்த சில நாட்களாக சந்தேக நபரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இதனால் சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது சந்தேக நபர் குறித்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.