ஹபரனை – பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரிய, மினிஹிரிகம பிரதேசத்தில் இன்று (01) பிற்பகல் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்த இரு தனியார் பயணிகள் பேருந்துகளே இவ்வாறு விபத்துக்குளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பஸ் விபத்தில் 40 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், பொலன்னறுவை மற்றும் ஹிங்குரங்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.