போலந்து செல்ல முயற்சித்த இருவர் சிஐடியிரால் கைது.!

0
41

போலி போலந்து நாட்டு விசாவுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கட்டார் வழியாக போலந்துக்கு பயணிக்க முயன்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 38 வயதுடைய தெமோதர மற்றும் பெலிகல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.