மின்னல் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு.!

0
30

பொலன்னறுவை – வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மைத்திரிகம பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (30) மாலை இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த, காலிங்கவில பகுதியை வசிப்பிடமாக கொண்ட 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் வெலிகந்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.