மட்டக்களப்பில் தனது வயலிலேயே பிரிந்த இளம் குடும்பஸ்தரின் உயிர்.!

0
101

மட்டக்களப்பு – எருவில் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை மாலை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எருவில் கிராமத்தைச் சேர்ந்த இரத்தினசிங்கம் உத்தமன் (வயது – 44) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி வி.ஆர்.மகேந்திரன், சடலத்தை பார்வையிட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடல்கூற்று பரிசோதனை முடிவுகளின்படி மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.(video-fb)

கொழும்பில் நடந்த பயங்கரம்.. மனைவியை ​கொன்று உடலை இரண்டு துண்டாக வெட்டி குப்பை மேட்டில் வீசிய கணவன்.. வீடியோ.!