டைனமற் வடிவில் தயாரிக்கப்பட்ட 8 கிலோ தங்கம் சிக்கியது.!

0
176

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்திச் சென்ற 8 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் கடற்பரப்பில் பயணித்த கட்டுமரத்தில் மிகவும் சூட்சுமமாக மறைத்து எடுத்துச் சென்ற தங்கமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் டைனமற் போன்று தயாரிக்கப்பட்டு எடுத்துச் சென்ற சமயமே கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தங்கத்தை கடத்திச் சென்ற மன்னாரைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (Fb)