கள்ளக்காதலின் உச்சம்.. பாம்பினை கொண்டு கணவனை போட்டுத்தள்ளிய மனைவி.. இதோ வீடியோ

0
171

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் மனைவி கணவரை கொடூரமாக கொலை செய்த மற்றொரு சம்பவம் வெளிவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் சமீபத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து ட்ரம்மில் கான்கிரீட் போட்டு மூடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இப்போது அதே மீரட்டில் மற்றொரு கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை பாம்பினை கடிக்க வைத்து கொன்றுள்ளார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல.. 10 முறை பாம்பினை கொண்டு கணவனை கடிக்க வைத்திருக்கும் கொடூரம் தெரியவந்துள்ளது.

இறந்தவர் மீரட்டைச் சேர்ந்த அமித் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அமித்தின் உடல் கட்டிலில் கிடப்பதையும், விஷப் பாம்பு அவரை பலமுறை கடிப்பதையும் காண முடிகிறது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அமித் விஷம் ஏறி மரணமடைந்தது தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் அமித்தின் மனைவி ரவிதாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். பின்னர் ரவிதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு பகீர் வாக்குமூலத்தை அளித்திருக்கிறார். அதில், தனது காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து கணவன் அமித்தைக் கொலை செய்ததாக ரவிதா தெரிவித்துள்ளார். ஆனால், கணவரை கொலை செய்வதற்காக ரவிதா ரூ.1000 கொடுத்து ஒரு பாம்பை வாங்கியதாகவும், அதனை வைத்து அமித்தைக் கொன்றதாகவும் சொல்லப்பட்டு வந்தது.

உண்மையில், போலீஸ் விசாரணையில் மேலும் திடுக்கிடும் வகையில் இன்னொரு சம்பவம் வெளிவந்துள்ளது. சனிக்கிழமை இரவே ரவிதாவும் அமர்தீப்பும் சேர்ந்து முதலில் அமித்தை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் அமித்தை கொன்றதை மறைக்க, பாம்பை கொண்டு கடிக்க வைப்பது வைத்து வீடியோ எடுத்துள்ளனர். அதன்படி, தங்களை காப்பாற்றிக் கொள்ள பாம்பு கடித்து அமித் இறந்தார் என்ற தவறாக பரப்பியிருக்கின்றனர். ஆனால், போலீசாரின் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இருவரும் சிக்கிக் கொண்டனர்.

இறந்த அமித் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் அவருக்கு நிகழ்ந்துள்ளது.