ஒரு பாறையில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்ததில், ஒரு குழந்தையின் தாயான, 28 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், காலி, யக்கலமுல்ல, கராகொட பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஓர் அங்கவீனமான சிப்பாய் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார், அது ஒரு பாறையிலிருந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களில் ஓட்டுநர், உயிரிழந்த பெண்ணின் தாயும், பாலர் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன. (Photos-fb)
புத்தாண்டு 3 நாட்களில் மட்டும் 18 பேர் உயிரிழப்பு.!















