கடற்கரையில் பெண் ஒருவர் சடலமாக மீட்ப்பு.!

0
179

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கெலிடோ கடற்கரையில் பெண்ணின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் 49 வயது மதிக்கதக்கவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு கைப்பையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.