திடீர் சுற்றிவளைப்பு; சிக்கிய தாய், 2 மகன்கள் மற்றும் 16 வயது சிறுமி.!

0
260

களுத்துறை – அளுத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து கடந்த வியாழக்கிழமை 5,081,000 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாய், 2 மகன்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட நால்வர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பேருவளை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதுடைய தாயும் 22 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகன்களும் அளுத்கம பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.