புத்தாண்டில் மதுபானசாலைகளுக்கு பூட்டு.!

0
236

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுவரி திணைக்களத்தின் பதிவைப்பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை, சுற்றுலா அதிகார சபையின் அனுமதி பெற்ற விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் , போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்பான குற்றங்கள் தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் 1913 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடளிக்குமாறு மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,