மூன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகையை விழுங்கிய திருடன்.. CCTV காட்சி.!

0
148

இன்று மதியம் வீதியில் பயணித்த பெண்ணிடம் தங்க நகையை திருடி விழுங்கிய நபரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் இவ்வாறு திருடப்பட்டுள்ளதுடன், திருட்டு இடம்பெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கிடைக்கப்பெற்ற எக்ஸ்ரே அறிக்கையின் பிரகாரம் சந்தேகநபரின் வயிற்றில் தங்க நெக்லஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.