இன்று (01) முதல் சதொசவில் நிவாரணப் பொதிகள் விநியோகம்.!

0
240

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதி இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும்.

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களடங்கிய நிவாரணப் பொதி 2,500 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய முடியும்.

இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நிவாரணப் பொதியை விலைக்குக் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.