இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

0
175

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் ஞாயிற்றுக்கிழமை (30)காலை 8.28 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (30) அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.