ஆ-பா-ச படங்களை வெளிநாட்டினருக்கு விற்ற 20 வயது இளைஞன் கைது.. இலங்கையில் சம்பவம்.!

0
156

சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளிநாட்டினருக்கு விநியோகித்ததற்காக 20 வயது இளைஞர் ஒருவர் ராகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு கைத்தொலைபேசி மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய கணினி ஆகியவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளுக்குப் பிறகு சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகம, கண்டலியத்த பலோவ பகுதியைச் சேர்ந்தவர். (tamilmirror)