மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள்.. 5 பெண்கள் கைது.!

0
162
Common photo

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து ஐந்து பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு விபச்சார விடுதிகளின் பெண் உரிமையாளர்கள் இருவரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடை, பென்தர, பசறை , தியத்தலாவை மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30,39,43 மற்றும் 49 ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.