தேவேந்திரமுனை படுகொலை சம்பவம் – வேனுக்கு தீ வைத்தவன் கைது.!

0
78

தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோவிலுக்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தர பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (23) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்ததாக சந்தேகிக்கப்படும் வேனுக்கு தீ வைத்த குற்றத்திற்காக மாத்தறை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கந்தர பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மற்றும் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.