யாழில் நடந்த சோகம்.. கணவன் தக்கியதால் இளம் மனைவி எடுத்த முடிவு.!

0
107

கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

யாழ் கட்டுடை அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 20 வயதான 4 மாத குழந்தையின் தாய்க்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்றுமுன்தினம்(20) முரண்பாடு ஏற்பட்டதுடன் இதன்போது கணவன் அவரை தாக்கியுள்ளார்.

இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் அன்றிரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.