கவனயீனத்தால் பறிபோன யாழ் இளைஞனின் உயிர்.. மட்டக்களப்பில் நடந்த சம்பவம்..! Video

0
320

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.

சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.