மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில்இ கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் 10 பேர் கொண்ட குழுவினரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வாழைச்சேனையை சேர்ந்த டிலோஜன் (வயது-33) என்பவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று ஆரையம்பதி பகுதியில் வாள்வெட்டுக் குழுக்களை கட்டுப்படுத்துமாறு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட நிலையில் இன்று மாலை மட்டக்களப்பு நகருக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.











