யாழில் நடந்த சோகம்..தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் உயிரிழப்பு.!

0
450

உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உடுவில் கற்பமுனை பகுதியில் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (03) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தினை பின் பக்கமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார்.

இதன்போது, உழவு இயந்திரத்திற்கு பின்னால் இருந்த சிறுவன் உழவு இயந்திரத்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது-11) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அஸ்வெசும கொடுப்பனவுக்கு தெரிவானவர்களின் பெயர்ப் பட்டியலை பார்ப்பது எப்படி..?

உதவி பிரதேச செயலாளர் தமிழினி விவகாரம்.. விசாரணையில் பொலிஸார்.!

நடுக்கடலில் தத்தளித்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல்.!