செவ்வந்தியின் தாயாரும் சகோதரரும் ஏற்பட்ட நிலை.!

0
168

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரான பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோரை பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று (25) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் தாயான சேசத்புர தேவகே சமந்தி மற்றும் சகோதரரான பிங் புர தேவகே சமிது திவங்க வீரசிங்க ஆகியோர் இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு இந்த சம்பவம் தொடர்பில் தெளிவான அறிவு இருந்ததாகவும், அவர்கள் தகவல்களை மறைத்து வைத்திருப்பது விசாரணைகளில் தெரியவந்ததாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.