விடுமுறையில் சென்று வீட்டில் கசிப்பு விற்பனை செய்த கடற்படை அதிகாரி கைது.!

0
139

பதுளை மாவட்டம் ஊவா பரணகம – கெடகொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் பாரியளவிலான கசிப்பு வகை போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடற்படை அதிகாரி ஒருவர் அம்பகஸ்தோவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கடற்படை அதிகாரி, விடுமுறையில் சென்ற நீண்ட நாட்களாக இத்தொழிலை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுமார் 18,000 கிராம் கோடா மற்றும் கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, மற்றுமொரு சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது

தப்பி சென்ற நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.