உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் இராணுவ வீரர் உயிரிழப்பு.!

0
174

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராவணா கொட பகுதியைச் சேர்ந்த இராவணா கொட விஜயபாகு முகாமில் பணியாற்றிம் இராணுவ வீரர் கொட்டாஹேன பிட்டிய ஜயந்த ஜனித் ஹேரத் (வயது-29) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, நேற்று (20) மாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

விடுமுறை நிமித்தம் தனது வீட்டுக்கு வந்த குறித்த இராணுவ வீரர் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்வாறு உயிர் இழந்தவர் பெயர் என்பவராவார். சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சவசாலையில் வைக்கபட்டுள்ளது.

திம்புள பத்தனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.