பளு தூக்கும் பயிற்சியின் போது நடந்த சோகம்.. அதிர்ச்சி வீடியோ.!

0
139

இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது 270 கிலோ எடையுள்ள கம்பி கழுத்தில் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் பளு தூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றவராவர்.

அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவர் தலைக்குமேல் தூக்கிய 270 கிலோ எடையுள்ள கம்பியானது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் பலமாக விழுந்தது.

அதிக எடையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கழுத்து முறிந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.