1,725,795 குடும்பங்களுக்கான பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும உதவித்தொகை நாளை வியாழக்கிழமை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இதனால் அஸ்வெசும பயனாளிகளுக்கு 12,555,651,250 ரூபாய் தொகை வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பயனாளிகள் நாளை முதல் தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து அஸ்வெசும தொகையைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.










