கிணற்றுக்குள் தவறி விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு.!

0
340

மெதகம, மெகல்லகம பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மல்கஸ்தலாவ, மெகல்லகம பகுதியில் வசிக்கும் 1 வயது 2 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணையில் தாய் வீட்டில் இருந்த போது, ​​வீட்டின் முன் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

சடலம் மெதகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.