ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா..?

0
146

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 216 கோடி ரூபாய் வழங்குவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கியது. இதனை எதிர்த்து ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார். அதில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மெட்டா நிறுவனம் டிரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்குகிறது.