அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு..!

0
175

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது நாளை வியாழக்கிழமை (30) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 220 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மா 165 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை நிற சீனி 235 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பு 285 ரூபாவாகவும்,ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 209 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.