கிளிநொச்சியில் மது போதையில் வயோதிப பெண்ணை மோதித்தள்ளிய பொலிஸார்..!

0
148

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவரை உந்துருளியில் பயணித்த பொலீஸார் மோதியத்தில் தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பயணித்த இரண்டு போலீஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த உந்துருளியில் மதுபானங்களும் இருந்தமை பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் வேளையில் அதிக மது போதையில் உந்துருளி செலுத்தி வந்த பொலீஸார் குறித்த வயோதிப பெண் பாதசாரி கடவையில் கடந்து செல்வதனை கூட அவதானிக்காது வாகனத்தை செலுத்தியதன் காரணமாக குறித்த பெண் மோதுண்ட நிலையில் வீதியில் தூக்கி எறியப்பட்ட நிலையில் தலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (Thamilselvan)