ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழப்பு..!

0
112

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலிடோ சந்தியில் ரயில் குறுக்கு வீதியில் ரயிலில் மோதி நபரொருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மருதானையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரியின் பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.