உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!

0
247

நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெய்லரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் புத்தகயா மாவத்தையிலிருந்து விஜயபுர மயானம் நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தில் நேற்று (09) இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இறந்தவர், நகரசபை உழவு இயந்திரத்தில் கழிவுகளை ஏற்றும் போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.