லெஸ்பியன் உறவுக்கு டார்ச்சர் செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை.!

0
397

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மீன் சந்தை பகுதியை சேர்ந்த பெண்தான் ஜெயஸ்ரீ (52). இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் பழகினார்.

நட்பாக பழகுவதுபோல நடித்து அந்த பெண்ணை ஒரு நாள் வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர் லெஸ்பியன் உறவில் ஈடுபட வற்புறுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அந்த இளம்பெண், கோழிக்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயஸ்ரீ கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், ஜெயஸ்ரீக்கு 33 வருடம் கடுங்காவல் சிறையும், ₹55 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.