அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கை இந்த மாதம் முதல் ஆரம்பம்.!

0
397

அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்ட பதிவு நடவடிக்கை அகில இலங்கை ரீதியாக ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி கருத்தரங்குகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் இடம்பெற்று வருகின்றது.