லொறியில் சிக்கி உயிரிழந்த பெண் குழந்தை தொடர்பில் வெளியான மேலதிக தகவல்.!

0
208

ஒரு வயது எட்டு மாத வயதுடைய பெண் குழந்தையான செனுஷி சிஹன்சா, குழந்தையின் சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு சனிக்கிழமை (28) மாலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம், மினிபே, ஹசலக, கினபலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையில் உள்ள தாயார் வீட்டில் வைத்தே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்,

வீட்டிற்கு தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக லொறியை இயக்கிய போதே, அந்த லொறியின் சில்லுக்குள் அடிபட்டு குழந்தை படுகாயமடைந்தார்.

லொறியில் அடிபட்ட குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அக்குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், லொறியை செலுத்தி வந்த உயிரிழந்த குழந்தையின் சிறிய தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.