தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்.!

0
145

ஹபரணை பகுதியில் தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலமொன்று காணப்பட்டுள்ளது.

ஹபரணை, மின்னேரிய வீதி 39,வது மைல்கல் பகுதியில் நேற்று இரவு கெப் வண்டியொன்று தீப்பிடித்துள்ளதுடன், பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

விசாரணையில் காருக்குள் சடலம் ஒன்று இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கெப் வண்டியின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படுவதுடன், வண்டியின் பின் இருக்கையில் சடலம் காணப்பட்டுள்ளது.

கெப் வண்டியின் உரிமையாளர் தெகட்டன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கிராண்ட்பாஸ் வதுல்ல வத்த பிரதேசத்தில் 50 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபரொருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.