மட்டக்களப்பில் நடந்த விபத்தில் 26 வயது இளைஞன் உயிரிழப்பு.!

0
275

மட்டக்களப்பு மாமாங்கம் வீதியில் நடந்த விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) இரவு மட்டக்களப்பு, மாமாங்கம் பிரதான வீதியில் விபத்திற்குள்ளாகி, ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கோவிலுக்கு அருகில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மாமாங்கம் பாடசாலை வீதியை சேர்ந்த 26 வயதுடைய R.சுபிஷான் என்னும் இளைஞனே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.