பேரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
318

தனமல்வில – பராக்கிரம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனமல்வில – வெல்லவாய வீதியில் பயணித்த பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 24 வயதுடைய ஹந்தபானாகல, வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது தனமல்வில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.