மட்டக்களப்பில் வியாழேந்திரனின் கார் விபத்து.. இதோ வீடியோ

0
217

மட்டக்களப்பு – கல்லாறு பாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.

கல்லாறு பாலத்தில் பயணித்து கொண்டிருந்த மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு விபத்திற்குள்ளான வாகனங்களில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் காரும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரையில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி விபத்தில் வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.