நுவரெலியா டிப்போ படுகொலை.. சிக்கிய காசாளர்.. பொலிஸார் வெளியிட்ட தகவல்.!

0
162

நுவரெலியா டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கழுத்தை அறுத்து கொன்று பத்து இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த அதே டிப்போவின் காசாளர் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை நெலும் குளம் பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிப்போவில் காவலராகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.