வவுனியாவில் இளம் குடும்பப்பெண் எடுத்த முடிவு..!

0
105

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்து மரணமடைந்துள்ளார்.

நேற்று (29) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…

வவுனியா, செட்டிகுளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் இரவு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே மரணமடைந்தவராவார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.